1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 14 நவம்பர் 2024 (14:16 IST)

இன்று மாலை மற்றும் இரவில் 19 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..!

இன்று மாலை முதல் இரவு நேரம் வரை, தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் அதேபோல், லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி விலகுவதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தேனி, கடலூர், திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. நாளை ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Edited by Siva