1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 24 டிசம்பர் 2017 (13:49 IST)

குக்கருக்கு ஓட்டு போட வேணாம்னு நாங்க சொல்லவே இல்லையே; செல்லூர் ராஜூ

இரட்டை இலைக்கு வாக்கு கேட்டோமே தவிர குக்கருக்கு வாக்களிக்க கூடாது என்று நாங்கள் சொல்லவே இல்லையே என அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

 
ஆர்.கே.நகரில் ஆர்.கே.நகரில் தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 5வது கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவில் தினகரன் முன்னிலை வகித்து வருகிறார். இதுகுறித்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துகளை பதவிட்டு வருகின்றனர். இந்நிலையில் சர்ச்சை கருத்துகளை தெரிவிக்கும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-
 
தினகரனின் வெற்றி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அதிமுக ஒரு ஆலமரம். அதை யாராலும் பிளவுப்படுத்த முடியாது. இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்றுதான் கேட்டோமே தவிர, குக்கருக்கு வாக்களிக்க கூடாது என்று கூறவில்லையே என்று கூறியுள்ளார்.