செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 24 டிசம்பர் 2017 (16:11 IST)

50 சதவீத வாக்குகள் ; எல்லா சுற்றிலும் முன்னிலை ; அடித்துக் கிளப்பும் தினகரன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை, சென்னை இராணி கல்லூரியில் இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. 14 மேஜைகளில் மொத்தம் 19 சுற்றுகளாக இந்த வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது. 
 
தற்போது வரை 15 சுற்றுக்கள் எண்ணி முடிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் சுற்று முதல் தினகரனே  முன்னிலையில் இருக்கிறார். தற்போதைய நிலவரப்படி, டிடிவி தினகரன் 72,413 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளரான மதுசூதனன் 38,966 வாக்குகள் மட்டுமே பெற்று 2ம் இடத்தில் இருக்கிறார். திமுக வேட்பாளர் மதுசூதனனோ 20,388 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
 
இதில் முக்கியமாக அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட தினகரன் 33,447 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தற்போது வரை எண்ணப்பட்ட மொத்த வாக்குகளில் 50 சதவீதத்திற்கும் மேலான வாக்குகளை தினகரன் பெற்றுள்ளார். 

 
தற்போது 16வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது..