1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 24 டிசம்பர் 2017 (13:32 IST)

நடந்தது தேர்தலா? எல்லாம் பணத்திற்காக விழுந்த வாக்குகள்; விரக்தியில் தமிழிசை

ஆர்.கே.நகரில் நடந்தது தேர்தேல இல்லை என்றும் எல்லாம் பணத்திற்காக விழுந்த வாக்குகள் என்றும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

 
ஆர்.கே.நகரில் ஆர்.கே.நகரில் தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 5வது கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவில் தினகரன் முன்னிலை வகித்து வருகிறார். இதுகுறித்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துகளை பதவிட்டு வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மாநில தலைவர் கூறியதாவது:-
 
பாஜக பின்னிலையில் இருக்கிறது மற்ற கட்சிகள் முன்னிலையில் இருக்கிறது என்றெல்லாம் சொல்லாதீர்கள். தமிழகம் தான் தன்மானத்தில் பின்தங்கியுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் நாங்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறோம் பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது என்று. டிடிவி தினகரன் ஏன் முன்னிலையில் இருக்கிறார் என்று உங்களுக்கு தெரியாதா? நடந்தது தேர்தலே இல்லை என்று கூறியுள்ளார்.
 
6வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் தினகரன் முன்னிலை வகித்து வருகிறார். பாஜக நோட்டாவை விட குறையான வாக்குகள் பெற்றுள்ளது.