1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Radharavi says BJP did wrong decision like vishal

விஷாலை போல பாஜக நினைத்ததும் தவறுதான் - ராதாரவி

ராதாரவி
ஆர்.கே.நகரில் போட்டியிடுவது குறித்து விஷால் எடுத்த தவறான முடிவு போலவே பாஜக போட்டியிட நினைத்த முடிவும் தவறானது என ராதாரவி கூறியுள்ளார்.

 
ஆர்.கே.நகரில் ஆர்.கே.நகரில் தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 5வது கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவில் தினகரன் முன்னிலை வகித்து வருகிறார். இதுகுறித்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துகளை பதவிட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் ராதாரவி கூறியதாவது:-
 
ஆர்.கே.நகரில் முன்னிலை வகிக்கும் தினகரனுக்கு வாழ்த்துகள். இந்த தேர்தல் மூலம் 200 ஆண்டுகள் ஆனாலும் பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பது தெரிய வந்துள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து விஷால் தவறான முடிவு எடுத்தார். விஷால் எடுத்த முடிவு போலவே பாஜக போட்டியிட நினைத்த முடிவும் தவறானது என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
தேசத்தை ஆளும் கட்சிக்கு நோடாவுடன் தேர்தல் போட்டி: சு.சுவாமி நக்கல் ட்விட்!!