செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 24 டிசம்பர் 2017 (12:34 IST)

தேசத்தை ஆளும் கட்சிக்கு நோடாவுடன் தேர்தல் போட்டி: சு.சுவாமி நக்கல் ட்விட்!!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 14 மேஜைகளில் மொத்தம் 19 சுற்றுகளாக இந்த வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது. தற்போது வரை 4 சுற்றுகள் முடிவில் டிடிவி தினகரன் மின்னிலையில் உள்ளார்.
 
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் ஜெயிப்பார் என்று டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். 
 
மேலும், ஜெயலலிதா மரணம் தினகரனுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெருவார். 2019 சட்டசபை தேர்தலில் பிறிந்திருக்கும் அதிமுக அணி ஒன்றிணையும் என தெரிவித்துள்ளார். 


 

 
அதோடு நிறுத்தாமல், தேசத்தை ஆளும் மத்திய கட்சியான பாஜக நோடாவிற்கு கிடைத்த வாக்குகளை கூட பெறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். சுப்பரமனியன் சுவாமியின் இந்த பதிவுகள் சற்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.