வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : சனி, 16 டிசம்பர் 2023 (16:11 IST)

வைகையில் நீர்த்திறப்பு: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Vaigai
வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டு உள்ளதை அடுத்து ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
வைகையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக நீர் திறக்கப்படுவதாகவும் இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3000 கன அடி வீதம் திறக்கப்பட்டுள்ளது அடுத்து வைகை ஆற்றின் வழியாக ராமநாதபுரத்திற்கு இந்த நீர் செல்ல உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நாளை அதாவது டிசம்பர் 17 முதல் டிசம்பர் 19ஆம்   தேதி வரை வினாடிக்கு 2500 கன அடி நீர் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வைகை ஆற்றின் கரையோர மக்கள்  பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
Edited by Mahendran