ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : சனி, 16 டிசம்பர் 2023 (09:22 IST)

18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

Rain
தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் இன்று காலை  10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னை உள்பட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு என அறிவித்துள்ளது.

 ஏற்கனவே டிசம்பர் 16, 17 ஆகிய இரண்டு தினங்களில் தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது என்பதும்  ஒரு சில இடங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 இந்த நிலையில் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ள 18 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடத்த நடவடிக்கை எடுத்துக் கொள்ள பொது மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Siva