1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : சனி, 7 மார்ச் 2026 (08:35 IST)

ரூ.2135 கோடி மதிப்பில் சுரங்கப்பாதை.. இனி வயநாடு மக்களுக்கு பயமில்லா பயணம்..!

ரூ.2135 கோடி மதிப்பில் சுரங்கப்பாதை.. இனி வயநாடு மக்களுக்கு பயமில்லா பயணம்..!
கேரளாவின் வயநாடு பகுதியில் அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவுகள் மற்றும் அதனால் உண்டாகும் பெரும் சேதங்களுக்கு தீர்வுகாணும் வகையில், கோழிக்கோடு மற்றும் வயநாடு இடையே புதிய சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்துள்ளார். தற்போது பயன்பாட்டில் உள்ள மலை வழிச்சாலையில் நிலச்சரிவு அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த மெகா திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
சுமார் ரூ.2135 கோடி  மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள இந்தச் சுரங்கப்பாதை 8.7 கிலோமீட்டர் நீளம் கொண்டதாகும். நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளைத் தவிர்த்து, மலைக்கு அடியில் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அடுத்த நான்கு ஆண்டுகளில் பணிகளை முழுமையாக முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
இந்த சுரங்கப்பாதை பயன்பாட்டிற்கு வரும்போது, கோழிக்கோடு - வயநாடு இடையேயான பயண நேரம் பெருமளவு குறைவதுடன், பருவமழை காலங்களிலும் மக்கள் அச்சமின்றி பயணிக்க முடியும். 
 
கேரளாவின் உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலா துறையில் இத்திட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இப்பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
 
Edited by Siva