1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Water from puzhal lake to be opened

செம்பரம்பாக்கத்தை தொடர்ந்து புழல் ஏரி திறக்கப்படுகிறது!

Chennai
புழல் ஏரிக்கு அதிக தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் உபரி நீரை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
பருவமழை, நிவர் புயல் தற்போது புரெவி புயல் ஆகியவற்றால் தமிழகத்திற்கு அதிக மழை பொழிந்து நீர் நிலைகள் நிரம்பியுள்ளது. குறிப்பாக சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் செம்பரம்பாக்கம் நிரம்பியதை தொடர்ந்து புழல் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. 21 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் தற்போது 20 அடிக்கு நீர் உள்ளது. 
 
புழல் ஏரிக்கு வினாடிக்கு 2,000 கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் உபரி நீரை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி புழல் ஏரி இன்று பிற்பகல் 3 மணிக்கு திறக்கப்படுகிறது. முதற்கட்டமாக வினாடிக்கு 500 கன அடி நீர் புழல் ஏரி திறக்கப்படுகிறது. 
About Writer
Sugapriya Prakash