செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 4 டிசம்பர் 2020 (07:40 IST)

புரெவி புயல் எதிரொலி: தமிழகம் முழுவதும் விடிய விடிய கனமழை!

தமிழகத்தில் இன்று புரெவி புயல் கரையை கடக்கும் நிலையில் சென்னை உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மயிலாடுதுறை கொள்ளிடம் பகுதியில் அதிகபட்சமாக 33 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
மேலும் ராமேஸ்வரத்தில் 20 சென்டி மீட்டர் மழையும் திருத்துறைப்பூண்டியில் 22 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது
 
தேனாம்பேட்டை சென்னை அண்ணா சாலை சைதாப்பேட்டை ஆழ்வார்பேட்டை மயிலாப்பூர் திநகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை 
 
மேலும் சென்னையின் பல முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதை அடுத்து வாகனங்களில் செல்பவர் சிக்கலில் உள்ளனர். புரெவி புயல் இன்று கரையை கடந்து கொண்டிருப்பதன் காரணமாக இன்னும் சில மணிநேரங்களுக்கு சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது