செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 30 செப்டம்பர் 2023 (14:05 IST)

கழிவறை கேட்டு காத்திருக்கு போராட்டம்! – மதுரை உசிலம்பட்டியில் பரபரப்பு!

Toilet
உசிலம்பட்டியில் பட்டியிலன மக்கள் காலனிப்பகுதிக்கு கழிப்பறை வசதி கேட்டு பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்டது கருக்கட்டான்பட்டி.இங்குள்ள காலனிப்பகுதியில் பட்டியலின மக்கள் சுமார் 150க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இக்காலனி மக்கள் பொதுக்கழிப்பிடம் கேட்டு நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.ஆனால் அரசு சார்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கபப்படவில்லை எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் - தீண்டாமை ஒழிப்பு முன்னனியினர் மற்றும் மற்றும் பொதுமக்கள் இணைந்து கழிப்பறை வசதி கேட்டு கருக்கட்டான்பட்டியிலிருந்து நடைபயணமாக உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் ஆண்கள் பெண்கள் உள்பட சுமார் 300க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.இவர்களின் காத்திருப்பு போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.