வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 30 செப்டம்பர் 2023 (13:47 IST)

காவிரி நதிநீர் பிரச்சினை; மதுரையில் நாம் தமிழர் கட்சி போராட்டம்!

NTK
காவிரி நதி நீர் பிரச்சனையை கண்டித்து கர்நாடக அரசை கண்டித்தும் திமுக,பாஜக அரசை கண்டித்தும் நாம் தமிழர் கட்சியினர் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்


 
காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்கான நீரினைத் திறந்துவிட மறுக்கும் கர்நாடகா மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசைக் கண்டித்தும், தமிழகத்திற்கான உரிமைகளைப் பெற்றுத்தராமல் காலம் தாழ்த்தி வரும் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் தமிழர் விரோதப்போக்கைக் கண்டித்தும்,

தமிழ்நாட்டின் காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்ட திறனற்ற தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசைக் கண்டித்தும் இன்று தமிழ்நாட்டின் மாவட்டத் தலைநகரங்களிலும் நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து இருந்தால் அதன் அடிப்படையில் மதுரை புதூர் பேருந்து நிலையம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை முருகன் மற்றும் ஜெயசீலன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது காவிரி நதிநீரை திறந்து விட மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசையும் உரிமையை தர மறுக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, கூட்டணியில் இருந்து கொண்டு காவிரி நதிநீர் பிரச்சனை குறித்து வாய் திறந்து பேசாமல் இருந்து வரும் தமிழக திமுக அரசை கண்டித்தும், தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின்-க்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பி நாம் தமிழர் கட்சியின் மதுரை மண்டல அளவிலான உறுப்பினர்கள்,நிர்வாகிகள் பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.