1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 30 செப்டம்பர் 2023 (10:01 IST)

வீட்டின் முன்பு தேங்கிய கழிவுநீரை அகற்ற 10ஆயிரம் லஞ்சம்! - உதவிப்பொறியாளர் கைது

crime
மதுரை மாநகராட்சி 56வது வார்டு பகுதியில் வசிக்கும்  கணேசன் என்பவர் தனது வீட்டின் முன்பாக நீண்ட நாட்களாக  கழிவுநீர் தேங்கியிருப்பதாகவும், அதனை அகற்ற வேண்டும் என மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் இந்த நிலையில் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்காத நிலையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கழிவுநீர் தனது வீட்டின் முன்பாக தேங்கி இருப்பதால் கடும் சிரமத்திற்கு ஆளாகுவதாகவும் தெரிவித்துள்ளார்



 இந்த நிலையில் 56வது வார்டு மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்த உதவி பொறியாளர்  விஜயகுமார் வீட்டின் முன்பாக தேங்கியிருக்கும் கழிவு நீரை அகற்ற  பத்தாயிரம் ரூபாய் பணம் வேண்டும் என கேட்டுள்ளார்

இதுகுறித்து கணேசன் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார் இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரசாயனம் தடவிய பணத்தை கணேசனிடம் கொடுத்து அனுப்பினர்.

இதையடுத்து 56 ஆவது வார்டு மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து பத்தாயிரம் ரூபாய் பணத்தை லஞ்சமாக உதவி பொறியாளர்  விஜயகுமார் பெற்றபோது மறைந்திருந்த  லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தன