1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : சனி, 30 செப்டம்பர் 2023 (12:03 IST)

வந்தே பாரத் ரயிலால் வைகை எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றம்: புதிய நேரம் என்ன?

Train
சமீபத்தில் சென்னை நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்ட நிலையில் இந்த ரயிலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
 
இந்த நிலையில் சென்னை நெல்லை வந்தே பாரத் ரயில் காரணமாக சென்னை மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
வைகை எக்ஸ்பிரஸ் இதுவரை காலை 7:10 மணிக்கு மதுரையிலிருந்து கிளம்பி மதியம் 2:30க்கு சென்னை வந்தடையும். இந்த நிலையில் நெல்லை சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவதால் மதுரையில் காலை 6 40 மணிக்கு கிளம்பி மதியம் 2.10 மணிக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை வந்தடையும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 
 
மதுரையிலிருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரம் மட்டுமே மாற்றப்பட்டுள்ளதாகவும் சென்னையில் இருந்து மதுரைக்கு கிளம்பும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்றும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran