வி.எஸ்.பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம்!.. மருத்துவமனை அறிவிப்பு!...
2026 சட்டமன்ற தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக போட்டியிட்டவர் வி.எஸ்.பாபு. இந்த தொகுதியில்தான் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் போட்டியிட்டார்.
ஆனால், தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு முக ஸ்டாலினை விடவும் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். முக ஸ்டாலின் தோல்வி அடைந்தார். வி.எஸ் பாபு வெற்றி பெற்றவுடன் இரண்டு கைகளையும் காட்டியவாறு அவர் காட்டிய மேனரிசம் தொடர்பான வீடியோவை தவெக ஆதரவாளர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தார்கள்..
இந்நிலையில்தான், சில நாட்களுக்கு முன்பு சுவாசக் கோளாறு காரணமாக சென்னையில் உள்ள எம்.ஜி.எம் தனியார் மருத்துவமனையில் வி.எஸ்.பாபு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், அவரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக நேற்று இரவு முதல் சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இந்நிலையில்தான், தற்போது மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‘வி.எஸ் பாபு உடல்நிலைய்ல் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், அவரின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.