1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. vs babu health condition is going down

வி.எஸ்.பாபு உடல்நிலை கவலைக்கிடம்?!.. விரைவில் வெளியாகும் மருத்துவமனை அறிக்கை!...

vs babu
2026 சட்டமன்றத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலினை எதிர்த்து தவெக சார்பில் போட்டியிட்டவர்தான் வி.எஸ் பாபு. அந்த தேர்தலில் அவர் ஸ்டாலினை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

தேர்தல் முடிவு வெளியானதும் இரண்டு கைகளில் ஆட்டியவாறு அவர் காட்டிய மேனரிசம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. வி.எஸ்.பாபு கடந்த சில நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மூச்சு திணறல் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டது..

இந்நிலையில்தான், பாபுவின் உடல்நிலை குறித்து அவரின் குடும்பத்தாருடன் அமைச்சர் என்.ஆனந்த் பேசியதாகவும் அப்போது அவரின் உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லப்பட்டதாக செய்திகள் கசிந்துள்ளது. அனேகமாக இன்று வி.எஸ் பாபுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
தவெக பக்கம் போன அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு ரூ.35 கோடி!.. பொள்ளாச்சி ஜெயராமன் பகீர்!...