தமிழகத்தில் தினமும் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்!.. 9 பேர் உயிரிழப்பு!..
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் 250 பேருக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில்தான் நேற்று தமிழகத்தில் ஒரே நாளில் 253 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் செப்டம்பர் 18ம் தேதி வரை 16,830 டெங்கு பாதிப்பு பதிவாகியிருக்கிறது. இதுவரை 9 பேர் உயிரிழந்துவிட்டனர்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும் மருத்துவமனையில் காய்ச்சல் வாடுகளை அதிகப்படுத்தவும் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டிருக்கிறது.