1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ex ias sagaym advice cm vijay on stalin issue

விஜய் செய்தது சின்னப்புள்ளத்தனமா இருக்கு!.. சகாயகம் ஐ.ஏ.எஸ் பேட்டி...

sagayam ias
சில நாட்களுக்கு முன்பு சட்டசபையில் பேசிய தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் திமுக ஊழல் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருப்பதாக பேசினார். அதேபோல் திமுக காரர்கள் எப்போதும் நாங்கள் மிசாவை பார்த்தவர்கள்.. நாங்கள் மிசாவை பார்த்தவர்கள் என சொல்கிறார்கள். ஆனால் மிசா காலத்தில் உண்மையிலேயே என்ன நடந்தது என்பது பலருக்கும் தெரியும் எனக் கூறி ஸ்டாலினை நக்கலடிப்பதை போல ஒரு உடல் மொழியை காட்டுகின்றார்..

இது திமுகவினருக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக எம்பி ஆ.ராசா ஆகியோர் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் சிடி நிர்மல் குமாரையும் மிகவும் தரக்குறைவாக விமர்சித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் ‘முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் சிறையில் தாக்கப்பட்டதை கிண்டல் செய்யும் வகையில் விஜய் பேசியிருப்பதை ஏற்க முடியாது.. மானுட பண்பிற்கே எதிரான அதை நான் நிராகரிக்கிறேன்.. மாட்சிமை மிகுந்த சட்டப்பேரவையில் சிறுபிள்ளைத்தனமாக இது போன்ற செயல்களில் விஜய் ஈடுபடக்கூடாது’ என அறிவுரை செய்திருக்கிறார்..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஸ்டாலினை தடுத்த மும்மூர்த்திகள்!.. அதனால்தான் தோல்வி!.. அன்புமணி ராமதாஸ் கோபம்!..