செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 5 ஏப்ரல் 2021 (14:55 IST)

காலை 7 முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!

காலை 7 முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி இன்று மாலைக்குள் அனைவருக்கும் பூத் சிலிப் வழங்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 
 
ஒருவேளை பூத் சிலிப் இல்லையென்றாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்காளர்கள் வாக்களிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் 6.28 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் என்றும் தமிழகம் முழுவதும் 88,900 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன என்றும் சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.