வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 30 மார்ச் 2021 (07:49 IST)

தேர்தல் ரெய்டு - பறிமுதல் செய்யப்படும் பல கோடி ரொக்கம் - இன்று என்ன நடந்தது?

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரம் களைகட்டியிருக்கிறது.
 
இந்த நிலையில், தேர்தலின்போது வாக்காளர்களை ஈர்ப்பதற்காக பல்வேறு அரசியல் கட்சியினர் வாக்களிக்க பணம் தருவதாக எழும் சர்ச்சை பரவலாக காணப்படுகிறது.
 
இதையொட்டி, தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகள் தலைமையிலான குழுக்கள், தினமும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் திடீர் சோதனை நடத்தி கோடிக்கணக்கான ரொக்கத்தை பறிமுதல் செய்து வருகின்றன.
 
இதில் அதிகாரிகள் பறிமுதல் செய்த பணத்துக்கு முறையான கணக்கு மற்றும் அதை பொதுவெளியில் கொண்டு சென்றதற்கான காரணத்தை நியாயப்படுத்தும் ஆதாரங்களை காண்பித்தால் மட்டுமே அந்த பணத்தை அதிகாரிகள் விடுவிக்கிறார்கள்.
 
சில தினங்களுக்கு முன்பு, சுகா­தா­ரத்­துறை அமைச்­சர் விஜ­ய­பாஸ்­க­ரின் சகோ­த­ரர் உத­ய­கு­மா­ரின் உத­வி­யா­ளர் வீட்­டில் அதி­கா­ரி­கள் 13 மணி நேரம் சோதனை நடத்தினர். உத­ய­கு­மா­ருக்­குச் சொந்­த­மான தனி­யார் கல்­லூரி இலுப்­பூர் அருகே செயல்­பட்டு வரு­கிறது. அதில், விரா­லி­ம­லை­யைச் சேர்ந்த வீர­பாண்டி என்­ப­வர் உத­வி­யா­ள­ரா­கப் பணி­பு­ரிந்து வரு­கி­றார். அவ­ரது வீட்டில் நள்­ளி­ரவு வரை நடந்த சோதனையில் ரூ.50 லட்­சம் பண­மும் முக்­கிய ஆவ­ணங்­களும் பறிமுதல் செய்யப்பட்டன.
 
இதேபோல, திரு­வண்­ணா­மலை தொகு­தி­யில் போட்­டி­யி­டும் திமுக வேட்­பாளர் எ.வ.வேலு­வுக்­குச் சொந்­த­மான கரூ­ரில் உள்ள நிறு­வ­னங்­கள் உள்­பட 25க்கும் மேற்­பட்ட இடங்­களில் இரு நாள்­க­ளாக நடத்­தப்­பட்ட சோத­னை­யில் கணக்­கில் வராத ரூ.5.2 கோடி ரொக்­கம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டதாக கூறப்பட்டது.
 
ஆனால், இது தொடர்பான விவரங்களை வருமான வரித்துறையோ பிற அரசுத்துறைகளோ இன்னும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
 
இந்த நிலையில், திங்கட்கிழமை காலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும் எம்எல்எவுமான ஆர். சந்திரசேகரிடம் ஜேசிபி ஓட்டுநராக பணியாற்றியவரின் வீட்டில் 500 ரூபாய் நோட்டுகள் அடங்கிய ரூபாய் ஒரு கோடி அளவிலான பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
 
மணப்பாறை தொகுதியில் அதிமுக சார்பில் மூன்றாவது முறையாக சந்திசேகர் போட்டியிடுகிறார். இவரது தொகுதி நிதியில் நடைபெறும் பணிகளுக்கான ஒப்பந்ததாரர் தங்கபாண்டியன் என்பவரது வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.