1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : வியாழன், 2 செப்டம்பர் 2021 (18:45 IST)

உள்ளாட்சித் தேர்தல் : வாக்குப்பதிவு நேரம் மாற்றம்!

கொரோனா காரணமாக வாக்குப்பதிவு நேரம் மாற்றியுள்ளதாகவும் மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  

கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று கடந்த மே மாதம் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.

 தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் சில பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற நிலையில் மீதமுள்ள பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் அமைத்தல் மற்றும் வாக்களர் பட்டியல் தயார் செய்வதற்கான வழிமுறைகள் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் ஊராட்சித் தேர்தலை முன்னிட்டு 9 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளின் வாக்காளர்கள் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர். இதில், 9 மாவட்டங்களில், 76.59 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில். ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒன்றரை மணிநேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதாவது, காலை 7 மணி முதல் மாலை 5:30 மணி வரை என்பதற்குப் பதிலாக காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா காரணமாக வாக்குப்பதிவு நேரம் மாற்றியுள்ளதாகவும் மாநிலத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.  

மேலும், தமிழகத்தில் வரைவு வாக்களர் பட்டியல் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதால் தேர்தல் களை கட்டத் தொடங்கியுள்ளது.
.