சோறு போட மாட்டாங்க... ஓட்டு மட்டும் எண்ணனுமா? ஊழியர்கள் கறார்!
மீஞ்சூர் ஒன்றிய வாக்கு எண்ணும் மையத்தில் மதிய உணவு வழங்கப்படவில்லை எனக்கூறி வாக்கு என்னும் ஊழியர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் புதிதாக பிரிக்கப்பட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
தற்போது வரை எண்ணப்பட்டுள்ள வாக்குகளில் ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் மற்றும் மாவட்ட கவுனிலர் தேர்தலில் அதிமுகவை விட திமுக முன்னிலையில் உள்ளது. மேலும், யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் டிடிவி தினகரனின் அமமுக கட்சி கனிசமான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், திருவள்ளூர் மீஞ்சூர் ஒன்றிய வாக்கு எண்ணும் மையத்தில் மதிய உணவு வழங்கப்படவில்லை எனக்கூறி வாக்கு என்னும் ஊழியர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். இது அப்பகுதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல காலை வேதாரண்யம், ஜெயங்கொண்டம், அவிநாசி, சாத்தூர், ஆரணி, மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் காலை டிஃபன் தராததால் வாக்கு எண்ணிக்கை பணியில் தாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.