திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 2 ஜனவரி 2020 (16:07 IST)

ஒன்றியத்தில் கெத்து காட்டும் திமுக: இரண்டாம் இடத்தில் அதிமுக!

உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் தற்போதைய நிலவரப்படி திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இதற்கான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று நடைபெற்று வருகிறது.

காலையிலிருந்து தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் ஊராட்சி ஒன்றியத்திற்கான இடங்களில் ஆரம்பத்திலிருந்து பெரும்பான்மை பெற்று வந்த திமுக 182 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 158 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனவே திமுக – அதிமுக இடையேயான வெற்றி வித்தியாசத்தில் திமுக 30க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னனியில் உள்ளது. இது மேலும் அதிகரிக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் கணிக்கப்படுகிறது.

5067 இடங்கள் கொண்ட ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 700க்கும் மேற்பட்ட இடங்களில் மட்டுமே முன்னிலை நிலவரம் தெரிய வந்துள்ளது. மற்ற இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கையும் தொடங்கினால் முழுமையாக முன்னிலை விவரம் தெரிய வரும் என கூறப்படுகிறது.