1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 18 பிப்ரவரி 2026 (13:33 IST)

72 சீட் தருகிறேன்.. காங்கிரஸ் கட்சிக்கு மெகா வாய்ப்பு கொடுத்த விஜய்.. கூட்டணி உறுதியா?

rahul vijay
தமிழக அரசியல் களம் தற்போது ஒரு பெரும் மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், சேலம் பொதுக்கூட்டத்தில் "அதிகாரத்தில் பங்கு" குறித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 
 
குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் மத்தியில் விஜய்யின் இந்த அழைப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பல மாவட்ட செயற்குழு கூட்டங்களில் த.வெ.கவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
 
விஜய் தனது கணக்கீட்டின்படி, காங்கிரஸ் கட்சிக்கு சுமார் 72 தொகுதிகள் வரை ஒதுக்க தயாராக இருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்தால் எளிதாக ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்பதே விஜய்யின் வியூகமாக இருக்கிறது. 
 
தி.மு.க கூட்டணியில் அதிருப்தியில் இருக்கும் சில காங்கிரஸ் தலைவர்களும் இந்த புதிய மாற்றத்தை ரகசியமாக வரவேற்கின்றனர். காலங்காலமாக திராவிட கட்சிகளுடன் பயணித்த காங்கிரஸின் அரசியல் திசைவேகம், இப்போது மெல்ல த.வெ.கவை நோக்கித் திரும்ப தொடங்கியுள்ளது. 
 
இந்த புதிய கூட்டணி உருவானால், அது 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
 
Edited by Siva