வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 2 ஜனவரி 2020 (14:13 IST)

கண்ணனுக்கு ஒரு நீதி! சீமானுக்கு ஒரு நீதியா? – பொங்கிய கே.எஸ். அழகிரி

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சீமானை ஏன் கைது செய்யவில்லை என கே.எஸ்.அழகிரி கேள்வியெழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை கொலை செய்ய வேண்டும் என நெல்லை கண்ணன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக நெல்லை கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

நெல்லை கண்ணன் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் மு.க.அழகிரி ”பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை விமர்சனம் செய்து பேசியதற்காக நெல்லை கண்ணனை கைது செய்துள்ளீர்கள். ஆனால் ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொலை செய்தோம் என பேசிய சீமானை ஏன் கைது செய்யவில்லை? நெல்லை கண்ணனுக்கு ஒரு நீதி, சீமானுக்கு ஒரு நீதியா?” என கேள்வியெழுப்பியுள்ளார்.