அஇபுதமமுக பொதுச்செயலாளர் பதவிலிருந்து சசிகலா நீக்கம் - நடந்தது என்ன?..
அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து வி.கே சசிகலா நீக்கப்பட்டிருக்கிறார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வலதுகரமாக செயல்பட்ட வந்தவர் சசிகலா. ஜெ.வின் மறைவுக்கு பின் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்கிவிட்டு சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றார். அவர் சிறையிலிருந்த நான்கு வருடங்களில் எல்லாம் மாறிவிட்டது. அதிமுக ஆட்சி மற்றும் கட்சி இரண்டையும் எடப்பாடி பழனிச்சாமி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்..
2026 சட்டமன்ற தேர்தலின் போது அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்கிற அரசியல் கட்சி தொடங்கப்பட்டது. அதில் தானாகவே சென்று தன்னை பொதுச் செயலாளராகவும் சசிகலா நியமித்துக் கொண்டார். இந்நிலையில்தான்,தற்போது அந்த பதவியிலிருந்து சசிகலா நிக்கப்பட்டுள்ளார்.
அந்த கட்சியின் தலைவர் சக்கரவர்த்தி தேர்தலுக்கு முன்பு சசிகலா தானாகவே வந்து பொதுச்செயலாளர் பதவியை ஏற்றுக்கொண்டார். கட்சியை வழிநடத்துவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவர் அப்படி எதுவும் செய்யவில்லை.. தேர்தலுக்குப் பிறகு அவரை பார்க்கவே முடியவில்லை.. எப்போது சந்திக்க வாய்ப்பு கேட்டாலும் சொல்கிறோம்.. சொல்கிறோம் என்கிறார்கள். எங்களை அவர் பகடைக் காயாக பயன்படுத்திக் கொண்டது இப்போதுதான் எங்களுக்கு புரிந்தது. எனவே அவரே பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டோம் என தெரிவித்திருக்கிறார்.