செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 2 ஜனவரி 2022 (11:20 IST)

சிவகாசி பட்டாசு விபத்து; உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம்! – முதல்வர் அறிவிப்பு!

சிவகாசியில் நடந்த பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

சிவகாசியில் பாறைப்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலை விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 30 பேர் ஆலையில் பணிபுரிந்து வந்த நிலையில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தால் இரண்டு அறைகள் தரைமட்டமாகியுள்ளது.

உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்து சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம் அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.