வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 11 மார்ச் 2022 (09:01 IST)

குளத்தை காணோம் சார்; மனுக் கொடுத்த மக்கள்! – அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பூந்தமல்லி அருகே குளத்தை காணவில்லை என மக்கள் மனு அளித்த நிலையில் சென்று பார்த்த அதிகாரிகள் உண்மையாகவே குளத்தை காணாமல் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோப்புப்படம்

பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட அகரம்மேல் ஊராட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மூக்குத்திக்குளம் என்ற குளம் இருந்து வந்துள்ளது. சமீபத்தில் அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் இருந்த மூக்குத்தி குளம் மாயமாகி விட்டதாக அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் பூந்தமல்லி எம்.எல்.ஏ ஆகியோரிடம் புகார் அளித்துள்ளனர்.

அமைச்சர் இட்ட உத்தரவின் பேரில் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தபோது குளம் இருந்த பகுதியில் குளம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். விசாரணையில் மர்ம கும்பல் சிலர் மண்ணை கொட்டி குளத்தை மூடிவிட்டது தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து குளத்தை தூர்வாரி மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.