வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 11 மார்ச் 2022 (08:45 IST)

போரை நிறுத்த வலியுறுத்தி தூதரகம் நோக்கி பேரணி! – புதிய தமிழக கட்சி அறிவிப்பு!

உக்ரைனில் போரை நிறுத்த வலியுறுத்தி தூதரகம் நோக்கி பேரணி செல்ல உள்ளதாக புதிய தமிழகம் கட்சி அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து உலக நாடுகள் ரஷ்யாவிற்கு பொருளாதார தடைகளை விதித்து வரும் நிலையில், போரை நிறுத்த சொல்லி பல நாடுகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றன.

இந்நிலையில் போரை நிறுத்த வலியுறுத்தி சென்னையில் உள்ள உக்ரைன், ரஷ்ய தூதரகங்கள் நோக்கி இன்று பேரணி செல்ல உள்ளதாக புதிய தமிழகம் கட்சி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. உக்ரைன் போரால் அங்கு படித்த தமிழக மாணவர்களின் படிப்பு கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில் போரை வேண்டாம், அமைதி வேண்டும் என வலியுறுத்தி இந்த பேரணியை நடத்துவதாக கூறப்படுகிறது.