1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 7 மார்ச் 2024 (18:47 IST)

''விக்ரம்'' படத்தில் போதைப்பொருள் காட்சிகள் அதிகம்- சிரில் அலெக்சாண்டர்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், பகத்பாசி, விஜய்சேதுபதி, நரேன்  உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான படம் விக்ரம். இப்படம் இன்டஸ்ட்ரி ஹிட் அடித்து, வசூல் வாரிக் குவித்தது.
 
ஆனால், இப்படத்தில் போதைப்பொருள் தொடர்பான காட்சிகள் அதிகம் இருப்பதாக சினிமா விமர்சகர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் விமர்சித்திருந்தனர்.
 
இந்த நிலையில், ''புகையிலை கட்டுப்பாட்டிற்கான மக்கள் அமைப்பை சேர்ந்த சிரில் அலெக்சாண்டர் விக்ரம் படத்தில் போதைப் பொருட்கள் தொடர்பான அதிகமான காட்சிகள் இருப்பது வருத்தமளிக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும்,  ''பொது இடத்தில் புகையிலை பொருட்கள் பயன்படுத்தப்படுவதை தடுப்பதில் சுகாதாரத்துறை'' தோல்வியடைந்துள்ளது என்று விமர்சித்துள்ளார்.