1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 7 மார்ச் 2024 (08:04 IST)

டாணாக்காரன் தமிழ் இயக்கத்தில் பீரியட் கேங்ஸ்டர் கதையில் நடிக்கும் கார்த்தி!

வெற்றிமாறனின் உதவி இயக்குனரும் அசுரன் மற்றும் விடுதலை ஆகிய படங்களின் மூலம் நடிகராகவும் அறியப்பட்டவர் தமிழ். அவர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘டாணாக்காரன்’ திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் கடந்த 2021 ஆம் ஆண்டு ரிலீஸாகி வெற்றிப் படமாக அமைந்தது.

இந்த படம் வெளியாகி இரண்டு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இயக்குனர் தமிழ் இன்னும் தன்னுடைய அடுத்த படத்தை ஆரம்பிக்கவில்லை. இப்போது பல படங்களில் நடிகராக நடித்து வரும் இயக்குனர் தமிழ், அடுத்து கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படம் 1960 களில் நடக்கும் ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரு கடலோர கிராமத்தில் நடக்கும் அதிகாரப்போட்டிக்கான களமாக இந்த கதையை தமிழ் உருவாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் கப்பல் ஒரு முக்கிய அங்கமாக இடம்பெறும் எனவும் சொல்லப்படுகிறது. கடல் சார் வணிகத்தின் பின்னால் உள்ள அரசியலாக இந்த கதைக்களம் அமைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.