1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 28 பிப்ரவரி 2024 (14:48 IST)

துருவ நட்சத்திரம் கடைசி நேர பிரச்சனையால் என் இதயம் நொருங்கிவிட்டது.. கௌதம் மேனன் ஓபன் டாக்!

கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக  2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் பல பிரச்சனைகளைக் கடந்து நவம்பர் 24  ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக ரிலீஸ் ஆகவில்லை.

துருவ நட்சத்திரம் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘ஒன்றாக என்டர்டைன்மென்ட்’ நிறுவனம் கடைசி நேரத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரிலீஸ் ஆகாது என அறிவித்தது. இதையடுத்து டிசம்பர் 1 ஆம் தேதி திட்டமிட அந்த தேதியிலும் ரிலீஸாகவில்லை.

இதனால் இப்போது துருவ நட்சத்திரம் படத்துக்கு பதிலாக தான் இயக்கிய ஜோஷ்வா படத்தின் ரிலீஸில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் கௌதம். இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் அவர் பேசும்போது “துருவ நட்சத்திரம் கடைசி நேரத்தில் ரிலீஸ் ஆகாமல் போனது என் இதயத்தை நொருக்கிவிட்டது. இதனால் எனக்குள் அமைதி இல்லாமல் போய்விட்டது. என் குடும்பத்தாரே என்னைப் பார்த்து வருத்தப்பட ஆரம்பித்தனர்.

இந்த படத்தின் ரிலீஸுக்காக இப்போது முதலீடு செய்தவர்களும், பழைய முதலீட்டாளர்களோடு சேர்ந்து கொண்டதால் பிரச்சனையை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை. அது ஒரு கெட்ட கனவாக இருந்தது.” எனக் கூறியுள்ள்ளார்.