செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 7 மார்ச் 2024 (23:03 IST)

''தங்கலான்'' படம் ரிலீஸ் தள்ளிப்போக என்ன காரணம்?

பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் தங்கலான். இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு ஜிவி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

சமீபத்தில் தங்கலான் பட ஷூட்டிங் நிறைவடைந்தது. இப்படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இப்படம் வரும் ஏப்ரல்  12 ஆம் தேதி ரிலீஸாகும் என கூறப்பட்ட நிலையில் ரிலீஸ் தள்ளிப்போகலாம் என தெரிகிறது.
 
 
அதாவது, தங்கலான் படத்தின் VFX நேர்த்தியாக வரவேண்டும் என்பதற்காக, இக்குழுக்கு நேரம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும், தரமாக வரவேண்டும் என்பதற்காக ரிலீஸ் தேதி இன்னும் பல மாதமாகும் என தெரிகிறது.
 
இந்த நிலையில், இப்பட ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், ரூ.20 கோடி அதிகமாக செலவாகியுள்ளதால் தன் சொந்த பணத்தை போட்டு படமெடுத்துள்ளார் எனத் கூறப்படுகிறது. ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் இப்படத்திற்கு பா.ரஞ்சித் அக்ரிமெண்ட் போட்டுள்ளதால், இப்படத்திற்கு ஆன கூடுதல் செலவு தரவேண்டும் என தயாரிப்பாளரிடம் பா.ரஞ்சித் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
 
டிஜிட்டல் மார்க்கெட் வீழ்ச்சியடைந்துள்ளதாலும் இப்படத்திற்கு டிஜிட்டல் வியாபாரம் சிக்கல்  உள்ளதால் ரிலீஸ் ஆக தாமதமாகிறது என தகவல் வெளியாகிறது.