சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார் விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சை முடிந்து துபாயிலிருந்து சென்னை திரும்பினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நீண்ட நாட்களக உடல்நலம் காரணமாக அரசியல் வெளியில் பங்கேற்காது இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் சிகிச்சைகாக வெளிநாடு அழைத்து செல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சை முடிந்து துபாயிலிருந்து சென்னை திரும்பினார். ஆகஸ்ட் 30 ஆம் தேதி துபாய் சென்ற நிலையில் மனைவி பிரேமலதா, மகன் சண்முகப்பாண்டியனுடன் திரும்பினார்.