தொடர்புடைய செய்திகள்
- விஜயகாந்த் உடல்நலம் குறித்து தொலைபேசியில் விசாரித்த அண்ணாமலை!
- முதல்வர் பதவி வேணும்னா எடுத்துக்கோங்க..! – உத்தவ் தாக்கரே அறிவிப்பு!
- விஜயகாந்த் கால் விரல்கள் அகற்றம்..! – கண்ணீர் சிந்தும் தொண்டர்கள்!
- தமிழக முதல்வர் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு: விருதுநகர் நபர் கைது!
- தமிழகத்தில் இனி அகதிகள் முகாம் கிடையாது!? – அகதிகள் தினத்தில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
விஜயகாந்த் நலம்பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் உடல் நலம் பெற தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு அதிக சர்க்கரை காரணமாக கால்விரல்கள் அகற்ற பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனை அடுத்து அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தேமுதிக தலைவர் விரைவில் வீடு திரும்ப வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
எனது அருமை நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன். அவர் விரைவில் நலம்பெற்று, நல்ல உடல்நலத்துடன் இல்லம் திரும்ப விழைகிறேன்.
அடுத்த கட்டுரையில்
