பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி: விஜயகாந்த் அறிக்கை
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது தனக்கு வாழ்த்து தெரிவித்து பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: தொலைபேசி வாயிலாகவும் ட்விட்டர் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் எனது உடல்நிலை குறித்து நலம் விசாரித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
தொலைபேசி வாயிலாக விசாரித்த மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, திரு பன்னீர்செல்வம், மத்திய இணையமைச்சர் முருகன், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன், திருமதி சசிகலா, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர்களுக்கு எனது நன்றி என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்