புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 13 நவம்பர் 2021 (20:55 IST)

கோவை மாணவி விவகாரத்தில் அனைவரையும் கைது செய்க: விஜயகாந்த் கோரிக்கை

கோவை மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் குற்றம் செய்த அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார் 
 
கோவையில் 12-ம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லை காரணமாக வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேட்டு தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் மாணவியை தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மாணவியின் தற்கொலைக்கு காரணமான தோழியின் தாத்தா, தோழியின் அப்பா மற்றும் ஆசிரியர் ஆகியோரை சும்மா விடக்கூடாது என மாணவியே கைப்பட கடிதம் எழுதியதை அடுத்து மாணவியின் மரணத்திற்கு காரணமான அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்