இது புதுமையான திட்டம், வரவேற்கத்தக்க திட்டம்: முதல்வருக்கு விஜயகாந்த் பாராட்டு!
இது புதுமையான திட்டம் என்றும் வரவேற்கக் கூடிய திட்டம் என்றும் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் கடலலை வரை சென்று பார்க்க வசதியாக சிறப்பு பாதை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதை நேற்று திறக்கப்பட்ட நிலையில் பல மாற்று திறனாளிகள் தங்களது சக்கர வண்டிகளில் இந்த பாதை வழியாக மெரினா பீச் கடல் அலையில் காலை நினைத்து மகிழ்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சிறப்பான திட்டத்திற்கு அரசியல்வாதிகள் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களும் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: மாற்றுத்திறனாளிகள் கடல் அலைகளை கண்டுகளிக்க மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட தற்காலிக சிறப்பு பாதையை நிரந்தர பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுக்கள் என்றும் இது புதுமையான திட்டம் என்றும் அனைவராலும் வரவேற்கக்கூடிய திட்டம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்