செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 25 டிசம்பர் 2021 (09:59 IST)

விஜயகாந்த் திரைப்படங்களில் நடிப்பதாக வந்த தகவல் தவறானது: பிரேமலதா

நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் திரைப்படம் ஒன்றில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானதை அடுத்து அந்த செய்தி தவறானது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 
 
தங்களை தாங்களே பத்திரிக்கையாளர் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு யூடியுப் வீடியோக்களில் தவறான செய்திகளை பரப்பி வரும் ஒரு சிலர் விஜயகாந்த் விரைவில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெறும் என்றும் வதந்தியை கிளப்பினர்.
 
இந்த வதந்தி காட்டுத் தீ போல பல ஊடகங்களில் வெளிவந்த நிலையில் தற்போது இது குறித்து பிரேமலதா விஜயகாந்த் விளக்கமளித்துள்ளார். விஜயகாந்த் திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக வெளியான தகவல் தவறானது என்றும் அவர் எந்த திரைப் படத்திலும் நடிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார் 
 
இதனை அடுத்து விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் விஜயகாந்த் நடிப்பதாக கூறப்பட்டது முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.