செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 27 டிசம்பர் 2021 (12:02 IST)

கோவைக்கு திமுக உறுப்பினரே மேயர்... உதயநிதி ஸ்டாலின்!

மாதந்தோறும் 10 நாட்கள் கோவையில் தங்கி பணியாற்றுவேன் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். 

 
திமுக இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின், கோவையில் திமுக சார்பில் நடைபெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்துக்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, 
 
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பல்வேறு இடங்களில் திமுக வெற்றி பெற்றாலும், கோவை மக்கள் ஏமாற்றி விட்டனர். கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் மற்றும் மாவட்டம் முழுவதும் 800 நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். கோவை மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்தவரை அமர வைப்போம்.
 
மேயர் மட்டுமின்றி நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணை தலைவராக திமுக உறுப்பினரை அமர வைப்போம் என்று நீங்கள் அளித்த உறுதி மொழியை மு.க.ஸ்டாலினிடம் தெரிவிப்பேன். கோவையில் 100 சதவீதம் வெற்றி என்ற இலக்கை அடையும் வரை ஒயக்கூடாது. வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலில் வெற்றியை கொடுத்தால் மாதந்தோறும் 10 நாட்கள் கோவையில் தங்கி பணியாற்றுவேன் என பேசியுள்ளார்.