செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 25 டிசம்பர் 2021 (09:43 IST)

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் யாருடன் கூட்டணி? பிரேமலதா விஜயகாந்த்

நகர்ப்புற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்த அறிவிப்பை பிரேமலதா விஜயகாந்த் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ஒவ்வொரு தேர்தலிலும் அதிமுகவுடன் அல்லது தனித்து அல்லது புதிய கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வரும் தேமுதிக, சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என்றும் தனித்து போட்டியிடுவது என முடிவு செய்திருப்பதாகவும் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்
 
மேலும் கட்சியின் செயல் தலைவர் பொறுப்பை ஏற்படுத்துவது குறித்த அறிவிப்பை விரைவில் விஜயகாந்த் வெளியிடுவார் என்றும் அவர் குறிப்பிட்டார். எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிக கட்சி தனித்து போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.