வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 24 டிசம்பர் 2021 (19:22 IST)

கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்: முதல்வர் முக ஸ்டாலின் வேண்டுகோள்

கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகமாகி வருவதை அடுத்து பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ள முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
மேலும் வணிக வளாகங்கள் திரையரங்குகள் கடைகள் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.