1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. vijaya tharani get kushboo post in bjp?

குஷ்பு வகித்த பதவி விஜயதாரணிக்கு செல்கிறதா? தமிழக பாஜகவில் பரபரப்பு..!

Vijayatharani BJP
நடிகை குஷ்பு வகித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை விஜயதாரணிக்கு தர பாஜக மேலிடம் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுவது தமிழக பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை குஷ்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேசிய மகளிர் ஆணையர் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், அந்த பதவி தற்போது காலியாக உள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதாரணிக்கு இன்னும் எந்த பதவியும் கொடுக்கப்படவில்லை. சமீபத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் அவர் பேசிய போது, கட்சியில் சேர்ந்த ஆறு மாதங்கள் ஆகியும், எந்த பதவியும் கொடுக்கப்படவில்லை என தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அவரை சமாதானம் செய்யும் வகையில் குஷ்பு வகித்து வந்த தேசிய மகளிர் ஆணையர் உறுப்பினர் பதவியை கொடுக்க பாஜக மேலிடம் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், தமிழக பாஜகவில் உள்ள ஒரு பிரபல நடிகை அந்த பதவி எனக்கு வேண்டும் என்றும், விஜயதாரணிக்கு கொடுக்க கூடாது என்று முட்டுக்கட்டை போடுவதாகவும், இதனால் மேலிடம் குழப்பத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
தவெகவின் முதல் மாநாடு: நாளை கட்சி நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை..!