வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 18 ஜூன் 2021 (21:35 IST)

முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்த நாளை கொண்டாடிய விஜய் வசந்த் எம்பி!

முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்த நாளை கொண்டாடிய விஜய் வசந்த் எம்பி!
கர்மவீரர் காமராஜர் அவர்களின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த கக்கன் அவர்களின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் பிரமுகர்கள் கக்கனின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர் 
 
அந்த வகையில் நடிகரும் கன்னியாகுமரி எம்பியும் தொழிலதிபருமான விஜய் வசந்த் கக்கன் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார் இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
தியாக சீலர் கக்கன் ஐயா அவர்களின் பிறந்தநாளையொட்டி எமது அலுவலகத்திலும் பின்னர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திலும் அவரது திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்