திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 15 ஜூன் 2021 (15:37 IST)

அன்பில் மகேஷை சந்தித்த விஜய் வசந்த் - பின்னணி என்ன?

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தமிழக உயர்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சென்னை தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். 

 
இந்த சந்திப்பின் போது  பத்தாம் வகுப்பு 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது அதற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். அதேபோல் தமிழக அரசினால் நிர்ணயிக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் பயிலும் மாணவர்கள் சொல்ல  ஆசிரியர்கள் எழுதும் scribe திட்டத்தின் மூலம்  10, 12 ஆம் வகுப்பு மாணவர்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார். 
 
மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தேவையான கல்வி துறை சார்ந்த கோரிக்கையையும் மாணவர்கள் நலன் சார்ந்த விசயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொது செயலாளர் எம் எஸ் காமராஜ் தமிழ்நாடு வர்த்தக காங்கிரஸ் செயல் தலைவர் எம் ஜி ராமசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.