1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 18 ஜூன் 2021 (19:07 IST)

என் தந்தை இவர் முன் பெருமையாக கைகட்டி நின்றார்: கமல் டுவிட்

என் தந்தை இவர் முன் பெருமையாக கைகட்டி நின்றார் என உலக நாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்
 
காமராஜர் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்தவர்களில் ஒருவர் கக்கன் என்பதும் எளிமையும் சிகரமாகவும் நேர்மையும் சிகரமாகவும் அவர் இருந்தார் என்றும் இவரது பெயரில் ஒரு ரூபாய் கூட சொத்து இல்லை என்றும் கூறப்படுவதுண்டு
 
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது என்பதும் குறிப்பாக காங்கிரஸ் கட்சியினர் அவரது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கக்கன் பிறந்த நாளில் அவரது நினைவை கூறும் வகையில் கமல்ஹாசன் ஒன்றை பதிவு செய்துள்ளார், அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
கக்கனுக்கு முன்பு கைகட்டி நிற்பதைப் பெருமையாகக் கருதியவர் என் தந்தை. அதிகாரத்தால் அல்ல எளிமையால் ஒரு தலைமுறையையே ஈர்த்த தேசபக்தர் கக்கன். ஒரொரு நாளும் நினைவுகூரத்தக்க ஆளுமையை அவரது பிறந்தநாளில் போற்றுவோம்.