திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 14 மார்ச் 2021 (12:17 IST)

கன்னியாகுமரி இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அதில் 21 வேட்பாளர்களின் பெயர்கள் இன்று காலை அறிவிக்கப்பட்டிருந்தது என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் தற்போது மீதி உள்ள நான்கு வேட்பாளர்களின் பட்டியலும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடுபவர் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. கன்னியாகுமரி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் ஏற்கனவே பொன்ராதாகிருஷ்ணன் போட்டியிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இவர் தமிழ் திரைப்பட நடிகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹெச் வசந்தகுமார் அவர்களின் மகனும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அந்த தொகுதியில் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
மேலும் காங்கிரஸ் கட்சியின் 25 சட்டமன்ற உறுப்பினர்களின் வேட்பாளர்களின் முழு விவரங்கள் இதோ: