1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 11 மார்ச் 2021 (07:48 IST)

கன்னியாகுமரி மாணவனுக்கு கொரியரில் ஷூ: வாக்குறுதியை காப்பாற்றிய ராகுல்காந்தி!

கன்னியாகுமரி மாணவனுக்கு கொரியரில் ஷூ
சமீபத்தில் குமரி மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மாணவர் ஒருவரை சந்தித்து பேசியபோது ஸ்போர்ட்ஸ் ஷூ அனுப்புவதாக வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியின் படி தற்போது ராகுல் காந்தி கொரியரில் அனுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த ஒன்றாம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த ராகுல் காந்தி ஆண்டனி என்ற மாணவனை சந்தித்து பேசியபோது தடகள போட்டியில் தான் சாதிக்க விரும்புவதாகவும் ஆனால் அதற்கான ஷூ தன்னிடம் இல்லை என்றும் கூறியுள்ளார் 
 
ஐந்தாம் வகுப்பு படிக்கும் அந்த மாணவரின் ஆர்வத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்த ராகுல் காந்தி தான் ஷூ வாங்கி அனுப்புவதாக வாக்குறுதி அளித்திருந்தார். அந்தவகையில் நேற்று ஆண்டனி என்ற அந்த மாணவருக்கு கூரியர் மூலம் ஷூ வந்தது. அந்த ஷூவின் மதிப்பு ரூபாய் 5900 என்று குறிப்பிடப்பட்டிருந்தது 
 
இதனை அடுத்து ராகுல் காந்தி தனக்கு போன் செய்து பேசியதாகவும் அளவு சரியாக இருக்கிறதா? பிடித்திருக்கிறதா? என்று கேட்டதாகவும் அதற்கு தான் சரியாக இருக்கிறது என்று கூறி தனது நன்றியை தெரிவித்ததாகவும் கூறினார். என் வாழ்நாளில் இதை மறக்க மாட்டேன் என்றும் தடகள போட்டியில் சாதனை செய்வேன் என்றும் ஆண்டனி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது