ஞாயிறு, 15 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 17 நவம்பர் 2024 (11:53 IST)

நான் களத்தில் இறங்க தயார்..? இந்த தொகுதிதான் நம்ம டார்கெட்! - ஓப்பனா அறிவித்த பா.ரஞ்சித்!

நாம் அனைவரும் அரசியல் களத்தில் இறங்கி ஒரு தொகுதியை டார்கெட் செய்து வெற்றி பெற வேண்டும் என தனது ஆதரவாளர்களுக்கு பா.ரஞ்சித் அழைப்பு விடுத்துள்ளார்.

 

 

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவரான ஆம்ஸ்ட்ராங் சென்னையில் அவரது வீட்டின் முன்னே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின்னர் அவரது மனைவி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

இந்நிலையில் சமீபத்தில் மறைந்த ஆம்ஸ்ட்ராங் குறித்து ‘காலம் தந்த தலைவர் ஆம்ஸ்ட்ராங்’ என்ற புத்தகம் வெளியானது. இந்த புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டு பேசிய திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் “ ஆம்ஸ்ட்ராங் அண்ணன் சமூகத்தில் செய்த நன்மைகள் பல. எதிர்வரும் 2026 அரசியலை நாம் ஒரு திட்டத்தோடு பார்க்க வேண்டும். திருவள்ளூர் மாதிரியான ஒரு தொகுதியை டார்கெட் செய்து திருமதி ஆம்ஸ்ட்ராங்கை அங்கு நாம் வெற்றிபெற செய்ய வேண்டும்.
 

 

எல்லாரும் இணைந்து ஒரு தொகுதிக்காக பணியாற்றுவோம். இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. இப்போதே எல்லாரும் ஒன்று சேர்ந்து பணியாற்றுவோம். மக்களிடம் சென்று ஆம்ஸ்ட்ராங் யாரென்று சொல்லுவோம். நான் களமிறங்கி பணியாற்ற தயாராக இருக்கிறேன். நீங்களும் வாருங்கள். அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவோம்” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K